
மழை ஓய்ந்த இரவாய்,
சில்லென்று, சலனமின்றி,
அத்தனையும் அடித்து செல்லப் பட்டு,
துடைத்து வைத்தது போல்,
புதியதொரு நிலை!
சூழல் தரும் சுகத்தில்,
பரமமாய் விரிந்தாடுகிறது!
அடுத்த நொடி
தூசு பட்டு,
உடைந்த நீர்க்குமிழியாய்,
அணுவென குறுகுகிறது!
ஏதும் இல்லாமலாகி,
ரசிக்கிறது யாதுமாகி!
வெட்ட வெளியாம்,
முழு அண்டம் கடந்து,
ஆடி அடங்கி,
கிளர்ந்து எழுகிறது
சுயம்புவாய்..
எனது கரு இரகசியம்

1 Comment to "சுயம்புவாய்..."