அன்பே...

அன்பே...
என்னின் இயல்புகள் உன்னை சலனப் படுத்தியிருக்கலாம்!
உன்னின் சுயத்தை கொஞ்சம் அசைத்து கூட இருக்கலாம்!
அதன் பிரதிபலனாக,
என் ஆதார வேர்களில் ஏதொரு மாற்றத்தையும் எதிர்பாக்காதே!

உன்னை, நீயாக, நான் ஆராதிப்பேன்,
என்னை, நானாக, நீ அனுமதிக்கும் பட்சத்தில்...

உன் உதடுகளால் ஆகட்டும்,
உள்ளங்கையால் ஆகட்டும்,
எனக்கு உன் முத்தங்கள் வேண்டாம்!!
என் இதழ்களில் ஆகட்டும்!
இதயத்தில் ஆகட்டும்!

உன்னின் கனவில், என் வருகை குறைந்தால்,
என் தூக்கத்தை கெடுக்காதே!

என் ரசனை அழகு தான்!
என் இயல்பு மென்மை தான்!
என்ற உன் தீர்ப்புக்கு,
எத்தனை காலம் நான் ஒப்பனை இட்டுக் கொள்வது??

பிம்பங்கள் நாம்..
நீ என்னையும்,
நான் உன்னையும்,
பிரதிபலித்து வாழ்வோம்!
உரசிக்கொள்ள வேண்டாம்.

எட்டி நடக்கிறேன்..
இதோ,
நீ அழுகிறாய், என்னை சபிக்கிறாய்!
நான்,
இன்னும் எட்டி நடக்கிறேன் வேகமாக..
ஆனால்,
என் மனம் ஏனோ பிதற்றுகிறது?!!

Thursday, November 18, 2010 at 10:36 AM

2 Comments to "அன்பே..."

பிடித்தல் என்றாலும், நேசித்தல் என்றாலும் ......சமுதாயம் காட்சிப் படுத்தி வைத்திருக்கும் விடயங்கள் எல்லாம் ஒரு விதம்.....

அதில் இருந்து முரண்பட்டுப் போவது போல கவிதை வரிகள் இருந்தாலும்......என் பார்வையில் அதை விட சிறந்ததாகத்தான் படுகிறது......

//உன்னை, நீயாக, நான் ஆராதிப்பேன்,
என்னை, நானாக, நீ அனுமதிக்கும் பட்சத்தில்...//

தண்ணீரின் ஆழத்தில்...இருக்கும் கிடக்கும் முத்துப் பொல....காதலின் ஆழத்தில் இதுதான் சத்தியம். இங்கே.. நடக்கும் நாடகத்திலும் ....தொடர் நிகழ்வுகளிலும்...இந்த வரிகளின் அடர்த்தியை யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை.....நான் ....ஆழமாகவே உணர்ந்திருக்கிறேன்.

இது கற்றுக் கொடுத்தது..யாரென்றும் சொல்லமாட்டேன்...சொல்லி விட்டால்...அதில் இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும்....! உள்ளுக்குள் பத்திரப்படுத்தி வைப்பதில் ஒரு சுவாரஸ்யமும் சுகமும் இருக்கும்......

//பிம்பங்கள் நாம்..
நீ என்னையும்,
நான் உன்னையும்,
பிரதிபலித்து வாழ்வோம்!
உரசிக்கொள்ள வேண்டாம்.//

இங்கே ஒரு நித்ய காதலை காண்கிறேன்.....! மற்ற லெளகீக காதல்கள்....அழியும்....சர்வ நிச்சயமாய்.....ஆனால் இந்த பிரதிபலிப்பில் பார்த்துக் கொள்கிற சந்தோசமும்...திருப்தியும் கிடைக்குமா என்றால்...இல்லை என்று சொல்லமாட்டேன்...அது எனக்குத் தெரியாது....! ஏனென்றால் எனக்கு பிரதிபலிப்பதில் போய்க்கொண்டிருக்கிறது என் பொழுது....!

//எட்டி நடக்கிறேன்..
இதோ,
நீ அழுகிறாய், என்னை சபிக்கிறாய்!
நான்,
இன்னும் எட்டி நடக்கிறேன் வேகமாக..
ஆனால்,
என் மனம் ஏனோ பிதற்றுகிறது?!! ///

அழுதாலும் சபித்தாலும்...விட்டு விலகல் விட்டு விலகலாய் இல்லாமல் ஆழமாய் நிறைகிறது...ஆமாம் நீ பிதற்றுகிறாய்....அங்கே நிறைகிறது.

சராசரியானவர்களுக்கு இது வலி....ஆனால் புரிதல் உள்ளவர்களுக்கு....இது சுகம்.....!!!!!!!!!!!

செம என்று சொல்ல மாட்டேன்....ஏன்னா....இது கமெண்ட் கிடையாது....!


அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா....!

ஆழமாக அழகாக காதலின் உண்மை இயல்பை பிரதிபலிக்கும் அற்புத கவி! நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தமிழாலானதும் அருமையான உண்மைகள் நிரம்பியதும் சுயத்தை நிலைத்து காட்டுவதாகவும் அமைந்த படைப்பை சுவைத்ததில் ஓர் ஈடில்லாத ஆழ்ந்த நிறைவு...நன்றி!!! காலில் கிப்ரானின் கவிகளுக்கு ஒப்பாக அமைந்திருக்கிறது!

Post a Comment