எதைத் தழுவுவது,
எனக்காக கரைந்து கொண்டிருக்கும் மழையையா?
இல்லை,
என்னை கரைத்துக் கொண்டிருக்கும் உன்னையா?
என் இதழ் சிந்துவதெல்லாம்,
உன்னை வந்து,
சேர்வதாய் எண்ணியே,
இப்பொழுதெல்லாம், நான் புன்னகைக்கிறேன் !
சாலையில்,
தனியாய் நடக்கும் போதும்,
கைப் பிடித்து,
நீயே எனை வழி நடத்திச் செல்கிறாய்!
என் தோட்டத்தில் மலர்வதெல்லாம்,
உன் ஆசைகள் தானோ?
உதிர்வதெல்லாம்,
என் ஏக்கங்கள் தானோ?
நீயே எனை ஆள்கிறாய்..
நீ, நானாகத் தான் வாழ்கிறாய்!
என் குழப்பங்கள் எல்லாம் ஒன்றே!
நீ உரு உள்ளவனாயின்,
எப்படி இருப்பாய்?
கரு உள்ளவனாயின்,
எங்கு இருக்கிறாய்?
தேடும் பொருளும் நீயே!
தேர்ந்தெடுக்கும் பாதையும் உனதே!!
எனக்காக கரைந்து கொண்டிருக்கும் மழையையா?
இல்லை,
என்னை கரைத்துக் கொண்டிருக்கும் உன்னையா?
என் இதழ் சிந்துவதெல்லாம்,
உன்னை வந்து,
சேர்வதாய் எண்ணியே,
இப்பொழுதெல்லாம், நான் புன்னகைக்கிறேன் !
சாலையில்,
தனியாய் நடக்கும் போதும்,
கைப் பிடித்து,
நீயே எனை வழி நடத்திச் செல்கிறாய்!
என் தோட்டத்தில் மலர்வதெல்லாம்,
உன் ஆசைகள் தானோ?
உதிர்வதெல்லாம்,
என் ஏக்கங்கள் தானோ?
நீயே எனை ஆள்கிறாய்..
நீ, நானாகத் தான் வாழ்கிறாய்!
என் குழப்பங்கள் எல்லாம் ஒன்றே!
நீ உரு உள்ளவனாயின்,
எப்படி இருப்பாய்?
கரு உள்ளவனாயின்,
எங்கு இருக்கிறாய்?
தேடும் பொருளும் நீயே!
தேர்ந்தெடுக்கும் பாதையும் உனதே!!

2 Comments to "யாதுமானவன்..."