யாதொரு புது உறவு வருகையிலும்,
அது வரவா,
என்று ஆராயும் அறிவை,
குறை சொல்ல முடியவில்லை!
மிட்டாய் கண்ட குழந்தையாய்,
முதலில் கொஞ்சம் துள்ளிக் குதித்தாலும்,
ஏதோ ஒரு மூளையில்,
கொஞ்சம் வெட்கம், தயக்கம் என்று கொஞ்சம் மருகுகிறது!
பழகிய வெளிச்சத்தையே,
சில நேரங்களில்,
ஒதுக்கி விட நினைக்கும், எம் இயல்பு,
புது நிழலும், எம்மைச் சுடுவதாய் பிறழ்கிறது!
தவறில்லையே!
திடீர் நெருக்கம்,
மழைப் போல இதம் தந்தாலும்,
முதலில், திகைக்கத் தான் வைக்கிறது,
திணறித் தான் போகிறேன் கொஞ்சம்!
வெளிப்படையாய் மறைக்கும் சிறு நகையும்,
வேண்டாமே, என்று ஒதுக்கும் ஒளிவு மறைவும்,
பழைய உறவுகளே போதும்,
என்னும் பொய் ஞானமும்,
தவிர்க்க முடியவில்லையே,
ஒரு போதும்!
எத்தனை உறவுகள்,
இப்படி கடந்த போதிலும்,
"முதல் நாள் இன்று"
மட்டும்,
என்றும் இளமையாகவே சிரிக்கின்றது!
கடந்து , நிலைத்த உறவுகள் தந்த
அனுபவத்தில்,தைரியத்தில்,
கொஞ்சம் அஞ்சினாலும்,
கொஞ்சும் அழகாகவே மலர்கிறது ஒவ்வொன்றும்!
Subscribe to:
Post Comments (Atom)

4 Comments to "முதல் நாள் இன்று!!!"