வாழ்த்துக்கள்






நீ மிகச் சரியாக இருக்கிறாய்!
உன்னை பற்றிய சிந்தனைகள்
புன்னகையை தவிர
வேறொன்றும் தருவதில்லை!

நீ மிக அழகாக கடத்துகிறாய்,
உன்னுடன் கழிந்த  என் பொழுதுகள்,
மௌனத்தை தவிர
வேறதுவும் இசைப்பதில்லை!

நீ அறிவிக்கும் காதல்
மிக மிருதுவானது,
அது எமக்கு கண்ணியத்தை  தவிர,
வேறதுவும் உரைக்கவில்லை!

நீ சுட்டெரிக்கும்
உண்மைகளை உணர்த்தினாய்,
அது எம்மை இன்னும்
உரமேற்றியதே அன்றி,
வேறாய் நினைவில்லை!

நான் வெறுக்கிறேன்,
எமது அறிவு கொண்டு வெறுக்கிறேன்,
உன்னை நேசிக்கும் எமது இயல்பை!

நான் வெறுக்கிறேன்,
எமது ரசனைகளுக்கு
முட்டுப்  போடும் எமது அறிவை!

நான் வெறுக்கிறேன்,
உன் கோபங்களை
அனுமதிக்கும் எம் மௌனங்களை!

மீண்டும் நான் வெறுக்கிறேன்,
இருந்தும் உனக்காக எழுதும் என்னை!

எம் முழு மனது கொண்டு,
உன்னை வாழ்த்துகிறேன்,
எம் முழு அறிவு கொண்டு,
நகைக்கிறேன் எம்மை கண்டு
எப்போதும் !?


பின் குறிப்பு:
என்னை நானே வெறுப்பதற்கு,
முழு பொறுப்பும் கொண்டவர்க்கு,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tuesday, June 14, 2011 at 6:20 PM

5 Comments to "வாழ்த்துக்கள்"

வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் நேசத்தின் சாயலில் கண்ணியாமாய் வெளிப்படும் அன்பின் அடர்த்தி ஆழமான மெளனத்தை வாசிக்கும் மனிதர்களுக்குள் பரவ விடுவது உண்மையே!

கவிதைகளை வாசித்து முடித்த கண்கள் பிறப்பிக்கும் கட்டளையை ஏற்றுக் கொண்டு வாழ்த்துகிறேன்...நானும்...!

//நான் வெறுக்கிறேன்,
உன் கோபங்களை
அனுமதிக்கும் எம் மௌனங்களை!//

...உணர்ச்சிக்குவியலில் உதிர்ந்த வார்த்தைகள், அத்தனையும் அழகு.

கவிதைக்குக் காரணமானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! :)

நன்றி!

என் வாழ்க்கையில் ரம்யம் சேர்க்கும் உன் அன்புக்கும் அறிவுக்கும்.

Lovely lines these Ramya..
Wish your lucky friend a very happy birthday! :)

@Dheva, Ananthi: நன்றி!,உங்களின் வாசிப்பிற்கும், வாழ்த்துக்கும்!

@Scindia:
#நன்றி!

என் வாழ்க்கையில் ரம்யம் சேர்க்கும் உன் அன்புக்கும் அறிவுக்கும்.
#

என்றென்றும் அன்புடன்..
ரம்யா.

@Freddy: Thanks Dear..Btw.. She should say, that she is lucky..he he..

Post a Comment