யாம் அணுவென குருகுவோம்,
முற்றும் அற்று, ஏதும் இல்லாமல் போவோம்!
உணர்வுகள் யாவும் எட்ட முடியா,
வெறுமையாய் அடர்ந்து பரவுவோம்!
ஒலிகளுக்கு பரிச்சியமில்லாத,
அடர்ந்த மௌனத்தில் புதைந்து போவோம்!
யாதொரு நினைவின்றி,
தனித்து, யுகங்கள் கிடப்போம்!
எம் புலன்களை பட்டினியிடுவோம்,
எம் சிவந்த மேனி கருக்க,
எம் கண்கள் களைத்துச் சொருக!
எம் நரம்புகள் முறுக்கேற,
எம் ஜ்வாலைகள், எமை எரித்துப் போட..........................
ஜனிப்போம்,
அண்டம் முழுவதுமாய் விரிவோம்,
ஒளிப் பிழம்பாய் மிளிர்ந்து சிதறுவோம்,
ஜென்மங்களின் நீளத்தை, ஒற்றை நாளில், கடப்போம்,
பாரபட்சமின்றி, அத்தனையையும் ஆக்கிரமிப்போம்,
படைப்போம்,
அழிப்போம்,
யாம் யாமாகவே வாழ்வோம்!
@ரமணி: மிக்க நன்றி உங்களின் வார்த்தைகளுக்கு! எமக்கு அது தகுமோ என அஞ்சுகிறேன்!
@தேவா: #கவிதையின் சொல்லாடல் அருமை.#
இப்பொழுது தான் கவனிக்கிறேன் சொற்களை!
யாம் தேர்ந்தெடுக்கவில்லை, எமை தேர்ந்தெடுத்ததால்!
@சிந்து: ஊழிக் கூத்தா என்றால், ஆம், எம் ஊழ் என்னை வைத்து செய்யும் கூத்து!
#என்றென்றும் தனித்தன்மையுடன் நீவிர் நீராகவே வாழ்க!#
வேறென்ன வேண்டும்! இந்த எண்ணங்கள் போதும்..எமை வாழ வைக்கும்! மிக்க நன்றி..
@Ananthi: Thanks Ananthi
@Fred: Am so glad, that you read twice. Thanks dear, for your time as well as efforts to understand..
Subscribe to:
Post Comments (Atom)

6 Comments to "யாம் யாமாகவே வாழ்வோம்!"