யாம் எதுவாய் இருக்கிறோம்?
சில நேரங்களில்,
எமக்கே புரியவில்லை,
எம் மௌனத்தின் அர்த்தங்களை!
சில நேரங்களில்,
எமக்கே புரியவில்லை,
எம் மௌனத்தின் அர்த்தங்களை!
மனம் பூரித்து சிரிக்கிறதோ,
காயத்தில் புதைந்து கரைகிறதோ.
அத்தனையும்,
எம் மௌனத்தின் அடர்த்தியில் அடங்கி விடுகிறதே...
நீ எம்மில் அம்பு எய்யவும்,
யாம் அனுமதிக்கிறோம்,
அருகில் அமரவும் இடம் அளிக்கிறோம்!
எம் பயம் எல்லாம்,
உம்மைக் கண்டு அல்ல,
எம் மௌனத்தைக் கண்டே!
எம் பயம் எல்லாம்,
உம்மைக் கண்டு அல்ல,
எம் மௌனத்தைக் கண்டே!
ஏதோ ஒரு கொடூரம்,
வன்மம்,
இல்லை...
செதும்பல்,
தவழ்தல்,
தவழ்தல்,
இதில் எம் மௌனம் எவ்வகை?
மௌனத்தோடு ஒரு புன்னகை..
இதன் அர்த்தம்,
எதிராளியை, யாம் மன்னித்தேன் என்றா,
இனி தான் தொடக்கம் என்றா?
எதிராளியை, யாம் மன்னித்தேன் என்றா,
இனி தான் தொடக்கம் என்றா?
இது பேச்சு வரா மழலையின் மௌனமா?
பேசிப் பயனில்லை எனும் மிருக மௌனமா?
பேசாமலே விளங்க வைக்கும் இயற்கையின் மௌனமா?
அடர்த்தியான,
நிறமற்ற,
சலனமற்ற,
எம் மௌனம்...
இப்போதும் இமை மூடி மூழுகுகிறேன்!!
நிறமற்ற,
சலனமற்ற,
எம் மௌனம்...
இப்போதும் இமை மூடி மூழுகுகிறேன்!!

4 Comments to "மௌனம்..."