யாரோ நேற்று வந்தார்கள்..

தூங்கி எழுந்த களைப்பு இல்லை!
விழித்து இருந்த சலிப்பு இல்லை!

தேக்கி, சேர்த்து  வைத்திருந்த
ஞாபங்களுக்குள் ஒரு  பயணம்!
 நினைவுகளால்  ஒரு வாழ்க்கை!
  ......
ஒரு ஞாயிறு மாலை..
ஒரு கோப்பை கையில்...

யாரோ நேற்று வந்தார்கள்..
ஏதோ  தந்தார்கள்!
அவர்களின்  புன்னகையை  எம்  கன்னங்களில்  அப்பி  விட்டுச் சென்றார்கள்!!

எதை..எதையோ ...எம் அனுமதியின்றி கவர்ந்து சென்றார்கள்?
காயப்படுத்தும் எம் கோவம், மௌனம்.. எம் பரிசாய்.. .

இது  நாள் வரை...
குழந்தையிடமும் தமிழ் மொழி  பேசி வந்தோம்!
நீர் தாம் மழலை மொழி பேச கற்றுத்  தந்தாய்!!

எம் அறிவை நீ அறிவாய்..
இருந்தும் ..
இன்னும் கொஞ்சம் உரமேற்ற.. புகழூட்ட..
அறியாமையை நீ தைத்து அணிந்து கொண்டாய்!!

வலிமை, திறமை, புலமை...
இம்'மை'கலே  கொண்டே  அச்சான  எம் எழுத்துகளுக்கு...
தம்'மை' தந்து...
தோழ'மை' கொடுத்து...
எம்'மை', எம் எழுத்தை...
ஆழமாக்கிநீர்.

கண்  மூடி  கேட்கும்  இசை  போல்  அறிவாக...
கண்  திறந்து, கூடி வாழ்தல், அன்பாக..
அறிவை  முன்னிலைப்  படுத்தாத, பண்பை..  அழகை..இயல்பை..!
 நீர் தாம் எமக்கு  தந்தாய்!

 யாம் செய்யும் பிழையை உணர்த்த...
அதே  பிழையை எமக்காக  நீ செய்து எமக்கு உணர்த்தினாய்!!
" மூளை மடிப்புகளால் கசங்காத பாசம்!"
 இவ்வார்த்தையை நீர் தான் எம்முள் பதிவு செய்தாய்!!!
 நாளை யார் வருவாரோ??!!!
 
பின்குறிப்பு: இது ஒருவர், சார்ந்தது இல்லை..
எம் வாழ்க்கையில் இருக்கும்  ஒவ்வொருவருக்கும்..

Saturday, August 27, 2011 at 3:50 PM

4 Comments to "யாரோ நேற்று வந்தார்கள்.."

உணர்சிகரமான வரிகள்...

Awesome lines.. I can see them coming from straight from your heart :) too good!

யாம் செய்யும் பிழையை உணர்த்த...
அதே பிழையை எமக்காக நீ செய்து எமக்கு உணர்த்தினாய்!!
" மூளை மடிப்புகளால் கசங்காத பாசம்!"
இவ்வார்த்தையை நீர் தான் எம்முள் பதிவு செய்தாய்!!!
நாளை யார் வருவாரோ??!!! beautiful ramya...

மொத்தத கவிதையின் சாரம் - எதிர்பார்ப்புகளற்ற நேசம் + எதார்த்தமான பாசம்.

இப்டி சொல்லிட்டு போகலாம்னு பாத்தா..கவிஞர் ரம்யா கீழே இருக்குற வரிகள்ள ரொம்பவே டிஸ்டர்ப் பண்றாங்க...

//யாரோ நேற்று வந்தார்கள்..
ஏதோ தந்தார்கள்!
அவர்களின் புன்னகையை எம் கன்னங்களில் அப்பி விட்டுச் சென்றார்கள்!!//

கவிதையா டக்குனு சொல்லிட்ட...இதன் பின்னணியில் வார்த்தைகள் கொடுக்கும் சூட்சுமமான சந்தோசத்தை உணர முடியுது ஆனா சொல்ல முடியலை. சொன்னா நீ சொல்ல வர்ற மீன் போயிடும். அதனாலா அதை அப்டியே விட்டுடுறேன்.

//குழந்தையிடமும் தமிழ் மொழி பேசி வந்தோம்!
நீர் தாம் மழலை மொழி பேச கற்றுத் தந்தாய்!!//

ஏன்? ஏன்? இப்டி ஒரு இறுக்கமான எதார்த்தத்தை விட்டுட்டு ஒரு வாழ்க்கை அப்டீன்னு ஈகோவை சாட்டையால் அடிக்க சிலவரிகளால் முடியும்னு ப்ரூவ் பண்ற வரிகள்..!

மொத்தத்தில் ரசனைகளின் பிறப்பிடமாய் ஒரு கவிதை இருக்கிறது.

நீ ரசிக்கிறாய்!!! படைக்கிறாய்!!!!!

வாழ்த்துக்கள் ரம்யாஜி!

Post a Comment