மிருக ஆட்டம்...!

எமக்கு நானே சலித்துப்  போனோம்!
இந்த வார்த்தைகளும் ஏதோ பிதற்றலாகவே தெரிகிறது!
எப்பொதும் இருக்கும் இந்த மென்மையும், அழகுகளும் ..
யாம் களைத்து போய் விட்டோம்,

எம் மேனி கிழிக்கின்ற முட்கள் வேண்டும்!
எம் எலும்புகள் உடைக்கின்ற இடி வேண்டும்!
சுகமென்றும் வேண்டாம்!
துயரென்றும் வேண்டாம்!

எமக்கு இந்த அசதி களைய வழி காணும்!
இந்த மௌனம் வேண்டாம்,
மொழிகள் வேண்டாம்,

கோவம் வேண்டும் ,
காயங்கள் வேண்டும்!

சிந்தனை வேண்டாம், தெளிவு வேண்டாம்!
எம்மை யாமாய் உணர்த்தும் , உணரவைக்கும்..
எதுவுமே வேண்டாம்!

ரசனை வேண்டாம்..
ஒரு படி மேலே சொல்லுமானால்,
பாசமோ, வேஷமோ..அறவே வேண்டாம்!
சராசரியான மனிதமும் வேண்டாம், மிகைப் படுத்திய கடவுளும் வேண்டாம்!
முகமூடியே முகமாய் மாறவும் வேண்டாம்!


வெயிலில் கறுத்து ,
கடும் குளிரில் நடுங்கி,
துருவங்கள் நீந்தும் , ஒரு  வீரப் பயணம் வேண்டும்!

புல்வெளியிலும் , பனி துளிகளிலும்,
போகும், இந்த பல்லக்குப்  பயணம்,
எமக்கு வேண்டாம்!

சிறு துகளாய் நொறுங்கிப்  போக வேண்டும் ,
துகள் சேர்த்து பெரு மலையாய் உருமாற  வேண்டும்!

யாம் பிரதிபலித்த பின்பங்கள் உடைய வேண்டும்,
யாம் யாதும் இல்லாமல்  போக வேண்டும் !

பழைய உறவுகளை முறிக்க வேண்டும்,
மூளை கொண்டு ஒரு மிருக(மிரட்டும்) ஆட்டம் வேண்டும்!





Friday, September 16, 2011 at 3:14 PM

6 Comments to "மிருக ஆட்டம்...!"

மிருக ஆட்டம் நிஜமாவே மிரட்டுவதோடு.... மட்டுமில்லாமல் வழமையில் ஊறிப்போய் கிடக்கும் நிகழ்வுகளில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கவும் செய்திருக்கிறது.

முரண்களும் சேர்ந்தே இயங்கும் பிரம்மத்தின் ஒற்றைச் சாயலை மட்டும் வைத்துக் கொண்டு இயங்கும் அயற்சில் இருந்து ஒரு மீட்சி...

நான் நிறுத்திக்கிறேன்....ரம்யா....! இல்லேன்னா கருத்துரை கட்டுரையாகிடும்....

ரொம்ப ரசிச்சு உள்வாங்கிக்கிட்ட கவிதை....!

A poem tat carries so much of deep thinking and strong heartfelt outburst.. Too strong for me to understand :)
U ve gone a level higher! :D
Hope u re doing good..

//
சிறு துகளாய் நொறுங்கிப் போக வேண்டும் ,
துகள் சேர்த்து பெரு மலையாய் உருமாற வேண்டும்!
//
அருமையான வரிகள்

நல்ல கவிதை

Ramya,

Something is boring you! I think it's you!

Nice lines! I have been there, and I could easily sense your feeling!

Post a Comment