எழுதி வெகு நாளாகி விட்டது
எழுது பொருளும்,
சூழ்ந்துருக்கும் அழகுகளும்,
கவர்ந்து இழுக்கும் புதுமைகளும்,
எழுதலாம் என்றே தோன்றுகிறது!
ஆனால் மறு கணமே,
ஏதோ ஒரு தயக்கம்..
வேண்டாமே என்று ஒதுங்கிக் கொள்கிறது!
ஒரு சிறு தன்னிலை விளக்கம்,
இங்கே தேவைபடுகிறது என்றே நினைக்கின்றேன்!
இங்கே கிறுக்கிய வார்த்தைகள்,
எமது மூலையில் உதித்தவை தான்!
எமை பாதித்தது தான்!
அதற்காக,
அவ்வார்த்தைகளுக்குள் எமை சிறைப்படுத்தி பார்ப்பது..
வரிகளுக்கு இடையே எமை தேடுவது..
தவறு என்று சொல்ல மாட்டேன்
ஆனால்,
அது நிச்சியமாக எம் எழுத்தை பாதிக்கிறது!
எம் எழுத்துகளில் கொஞ்சம் சோகம் இழையோடினால்,
எம் கன்னம் துடைக்க கைக்குட்டை தேடும்,
உங்களின் அன்பை நான் மதிக்கிறேன்,
அதே வேளையில்,
அங்கே உணரப்பட்டது நான் அன்றி, எம் சிந்தனை அல்ல..
என்ற போது, எம் சிந்தனைகள் தோற்றுப் போகிறது!
இதை வாசிக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும்,
எழுத்துகளை கொண்டு, எம்மை மதிப்பிட வேண்டாம்!
எம்மை கொண்டு, எம் எழுத்தை அளவிட வேண்டாம்!
யாம் அறிவோம், நீவிர் எமையும் எம் எழுத்தையும் ரசிக்கிறீர் ஒரு சேர என்று,
ஆனால், ஒரு சேர என்பது...
ஒவ்வாது எல்லா தருணங்களிலும்!
எமை மறந்து விட்டு, எம் எழுத்துகளை வாசியுங்கள்!
இன்னும் கொஞ்சம் ஆழம் புரியலாம்!
அழகாக தெரியலாம்!
புது அர்த்தங்கள் விளங்கலாம்!
கொஞ்சம் ஐயம் இருக்கிறது!
இதற்கான புரிதல் எவ்வாறு இருக்குமோ என்று!
Ramya, you've mirrored that mysterious block which holds me back whenever I intend to do something,in such a precise manner!
I guess all of us come across such a point in life, when despite our earnest willingness to do something, we remain dormant and inert as though some invisible force is holding reins and directing our flow of action backwards.
However, once we overcome that force, our actions flow out in a gush that floods every existing thing, like a Rennaisance, that very poem of yours!!
Subscribe to:
Post Comments (Atom)

2 Comments to "எம் எழுத்துக்களை வாசியுங்கள்!!"