எல்லாம் ஒரு பிழைப்புக்காக ...


முகம் தெரிய முதலாளிகள்,
வீசும் எலும்புக்கு முட்டி மோதுவதும்,
அருகில் இருக்கும் சக மனிதரை எட்டி மிதிப்பதும்....

எல்லாம்...
ஒரு பிழைப்புக்காக .....

பெற்ற தாயையும் பிரிந்தோம்,
தோளில் சுமந்த தகப்பனையும் துறந்தோம்...
உயிர் கொடுத்து இடமளித்த, சொந்த மண்ணையும் மறந்தோம்..
நாதியற்று, அகதியாய் தொடருவோம்...

எல்லாம்...
ஒரு பிழைப்புக்காக .....

நன்றி கெட்டும்,
துரோகத்தை கொண்டாடியும்,
தன்மானத்தை புதைத்தும்,
ஏய்ச்சு ஒரு ஈனபட்ட வாழ்கை....

எல்லாம்...
ஒரு பிழைப்புக்காக .....

ஆடவரின் ஆண்மை எல்லாம் அடகு வைத்து விட்டோம்..
பெண்டிரின் பெண்மை எல்லாம் பெட்டியில் பூட்டி விட்டோம்..
மனிதரின் மனிதத்திற்கு கொள்ளியே வைத்து விட்டோம் ...

எல்லாம்...
ஒரு பிழைப்புக்காக .....

வாழ்வு என்ற சொல், தமிழில் அழிந்து விட்டது..
வரும் சங்கதியற்கு, மிஞ்சி இருப்பது வெறும் கழிவுகளே..
வாழ்கையின் கற்பை கூட்டமாக சூறையாடி விட்டோம்....

ஆட்டம் நிற்கும் வரை ஆடுவோம்!!!
பிழைப்போம்!

எல்லாம்...
ஒரு பிழைப்புக்காக .....

Friday, September 17, 2010 at 11:41 AM

5 Comments to "எல்லாம் ஒரு பிழைப்புக்காக ..."

///ஆடவரின் ஆண்மை எல்லாம் அடகு வைத்து விட்டோம்..
பெண்டிரின் பெண்மை எல்லாம் பெட்டியில் பூட்டி விட்டோம்..
மனிதரின் மனிதத்திற்கு கொள்ளியே வைத்து விட்டோம் ...///

ரொம்ப நல்லா இருக்கு, ரம்யா :-))
வாழ்த்துக்கள்..!!

மிக்க நன்றி ஆனந்தி!!!
வருத்ததுடனே இதை சொல்கிறேன்....
ஒரு பிழைப்புக்காக...
இவ்வளவு இழப்பு...
ஒத்துக்கொள்ள முடியவில்லை, ஆனாலும் உண்மை!!!!!

உண்மை தான் ரம்யா..
பிழைப்புக்காக.... இழந்தது எண்ணில் அடங்காது தான்..
உங்க வருத்தத்தையும் சொன்ன விதம் அருமை.. :-))

இதுவும் கடந்து போம்....

கொடுக்கப்படும் எல்லாம் நமது அனுபவத்திற்கு அது மேலும் செழுமையான ஒரு வாழ்க்கை அமைவதற்கான அடித்தளமாய் அமைந்து விடுகிறது....

வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை ரம்யா...!

Post a Comment