இது எனக்கும், எனக்குமான உறவு!
உன் பார்வைக்கு அழகாக,
இந்த ஒப்பனைகள் எனக்கு இஷ்டமில்லை.
உன் கைகளுக்கு விருந்தாக,
நான் சிலையாக விரும்பவில்லை.
ஏன் தாகத்திற்கு, நான் தண்ணீர் தேடும் போது,
நீ புகட்டும் மதுரசம், என் தாகத்தை தனிப்பதில்லை.
நான் களைப்பில் துயில எத்தனிக்கும் போது,
கனவுகளில், கோட்டையை பிடிக்க பயணிக்கும்,
உன் படையின் குளம்படி சத்தம்,
என் இமை மூட அனுமதிப்பதில்லை.
நான் விளிப்பது, அம்மா என்ற ஒற்றை சொல் தான் என்றாலும்,
நீ இசைக்கும் தேவகானங்களில், அது யாருக்கும்(உனக்கும் கூட) கேட்பதேயில்லை.
எனக்கான நிறம், கருப்பும் வெள்ளையுமாய் கலந்து நிற்க,
அதில் உன் தூரிகை கலக்கும் வண்ணங்கள், என்னோடு ஒட்டுவதேயில்லை.
இயல்பாய், இயற்கையாய் நான் இருக்கும் போது,
செயற்கையாய், என் மீது ஆதிக்கம் செலுத்தி அடக்கும்,
உன் இயல்புகள்,
எனக்கு புரிவதேயில்லை!!??

1 Comment to "நானும்?? நானும்!!"