இன்னும் எத்தனை காலம்,
என்னை இப்படி தவிக்க விட உத்தேசம்?
நான் ஒரு வேலை காலப் போக்கில்,
உன்னை மறந்து விடுவேன் என்கிற எண்ணமோ?
இல்லை, கடந்து போகும் வழியில்,
எங்காவது என்னை தொலைத்து விடும் கலகமோ?
நீ என்னை தொலைப்பதாய், உன்னை ஏமாற்றிக் கொண்டும்,
நான் உன்னை மறப்பதாய், என்னை கொன்றுப் போட்டும்,
வாழ்ந்து விடலாம் என்கிறாயா?
ஆனால்,
கோடி கோடி ஜென்மங்கள் வாழ்ந்த நமது நினைவுகளை என்ன செய்ய?
கண்கள் மூடும் போது, கண்ணீரில் கரையும் நமக்கான கனவுகளை என்ன செய்ய?
கொள்ளை கொள்ளும், அழகுன்னை, தள்ளி நின்றே ரசித்த என் கண்ணியத்தை என்ன செய்ய?
செல்லத் திமிர் செழிக்க, உனக்காக மறைத்த என் இயல்புகளை என்ன செய்ய?
நீ சொல்லி கேட்பதற்க்காகவே, கற்ற அத்தனையும் மறந்த, ஏன் மூளையை என்ன செய்ய?
உனக்கான மரியாதையின் உச்சமாய், உன் பாதங்களில் முத்தமிட்ட, என் மென்மையை என்ன
செய்ய?
உன்னை ரசிப்பதற்க்காகவே, தொலைத்த என்னை, என்ன செய்ய?
இத்தனை செய்தேன்...
இன்னமும் செய்வேன்...
இனிதே, இயல்பே....
பின் குறிப்பு: இது, நான் எவ்வித உறவோடும் சம்பந்தப் படுத்தி எழுதவில்லை....
ஒரு உறவை
அல்ல ,
ஒரு இயல்பை ரசிப்பதற்கு,
எந்த வித வடிவமும் தேவை இல்லை,
என்பது என் கருத்து.
என் ரசனையின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

0 Comments to "ரசனை, கண்ணியம் .... மனிதற்கு, உறவிற்கு...."