என்று தொடங்கியது இந்த பயணம்?

என்று தொடங்கியது இந்த பயணம்?
உனது வல்லமையின் அத்தாட்சியாய் எனைப் படைத்தாய்!
நானோ, எனது இயலாமையின் காட்சியாய் சுழல்கிறேன்!

உன் இருப்பால், என்னுள் ஒலியுட்டினாய்,
காணும் காட்சி யாவும் நீயானாய்!

இது என்ன அறியாமையின் வெளிப்பாடா?
இல்லை,
அறிதலின் அடையாளமா?

என்னை நானே படைக்கிறேன், இரசிக்கிறேன்,
என்னை நானே கொள்கிறேன், இரசிக்கிறேன்!?

முன்னும், பின்னும் முரண்பாடுகள்!
ஒரு கால் மேல் எழும்ப,
மறு கால் கீழ் இறங்க,
நான் நிலைகொள்வது எங்கே???


ஆயிரம் எண்ணங்கள் நட்டாய்...
கோடி கேள்விகள் முளைந்தன...
கனிந்த விடைகள்...
அத்தனையையும் மூட்டையாய்க் கட்டி,
அந்த கரிய கடலுக்குள், விதைத்து விட்டாய்..

நானோ, தண்ணீர் பயம் கொண்டவள்!
க(த)ரையினிலே, நீந்திக் கொண்டிருக்கிறேன்...
உன் அலைகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்...
என் தேடல்களை...........

Sunday, August 22, 2010 at 7:33 PM

1 Comment to "என்று தொடங்கியது இந்த பயணம்?"

சர்வ சாதாரணமா பெரிய பெரிய விசயம் எல்லாம் எழுதுவ.....கேட்டா....அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை....ஏதோ ஒரு புரிதல்னு சொல்லுவ....

//உனது வல்லமையின் அத்தாட்சியாய் எனைப் படைத்தாய்!
நானோ, எனது இயலாமையின் காட்சியாய் சுழல்கிறேன்!
//

இது வச்சு நான் பெரிய தொடரேன் எழுதுவேன் தெரியுமா ரம்யா? superb....!

Post a Comment