நெடு நாளாய் தள்ளிப் போட்டு விட்டோம்,
இப்போது, எனக்கு இது தெளிய வேண்டும்!
சம கால நிகழ்வுகள், என்னுள் சீற்றத்தை உருவாக்கி இருக்கின்றன!
சில கேள்விகள் உமக்காக..
நீர் யாரோ!
உனது தொழில் எதுவோ?
இந்த களம் உமது தான்!
ஒத்துக்கொள்கிறோம்,
ஆட்டமும், நீ தொடங்கியது தான்,
ஆனால்,
ஆடுவது என்னவோ, நாங்கள் தானே!?
அதீதமாய் அள்ளிக் கொடுத்தாய்!
இன்று,
அடியோடு அடித்துச் செல்கிறாய்!
இதில்,
யாம் செய்த தவறென்ன?!
எம் தேவை ஒன்றாய் இருக்க,
நீ, தருவது வேறாயின்....
எத்தனைக் காலம்,
நீ ஜெயிப்பதற்காக, நாங்கள் மடிந்து கொண்டே இருப்பது!?
பொறுமை வேண்டுமாம்!, சொல்கிறார்கள்...
மொத்தமே அறுபது ஆண்டுகள்!
இதில்,
இளமையில் இருபது,
முதுமையில் இருபது,
கழிந்துவிட,
மிஞ்சிய, இடைப்பட்ட,
இந்த இருபதில்,
பொருத்து இருந்தால்,
எமக்கு வாழ, அதை அனுபவிக்க,
இன்னொரு வாழ்க்கை தருவாயோ?!
சர்வாதிகாரி என எதிர்க்க வேண்டிய உன்னை,
ஏனோ, தெய்வமென அகத்தில் வைத்து மண்டியிடுகிறோம்!
இந்நிலை தொடரும் வரை,
நீயும் எம்மாற்றி தப்பித்து விடலாம்!
நாங்களும் மூடராய் பிழைப்பு நடத்துவோம்!?
யாம் பேசுவது பிழையெனில்,
எமை பேசவைத்த , கருவை, ஆதாரத்தை..
யாரெனக் கொள்வதோ!??
இப்போது, எனக்கு இது தெளிய வேண்டும்!
சம கால நிகழ்வுகள், என்னுள் சீற்றத்தை உருவாக்கி இருக்கின்றன!
சில கேள்விகள் உமக்காக..
நீர் யாரோ!
உனது தொழில் எதுவோ?
இந்த களம் உமது தான்!
ஒத்துக்கொள்கிறோம்,
ஆட்டமும், நீ தொடங்கியது தான்,
ஆனால்,
ஆடுவது என்னவோ, நாங்கள் தானே!?
அதீதமாய் அள்ளிக் கொடுத்தாய்!
இன்று,
அடியோடு அடித்துச் செல்கிறாய்!
இதில்,
யாம் செய்த தவறென்ன?!
எம் தேவை ஒன்றாய் இருக்க,
நீ, தருவது வேறாயின்....
எத்தனைக் காலம்,
நீ ஜெயிப்பதற்காக, நாங்கள் மடிந்து கொண்டே இருப்பது!?
பொறுமை வேண்டுமாம்!, சொல்கிறார்கள்...
மொத்தமே அறுபது ஆண்டுகள்!
இதில்,
இளமையில் இருபது,
முதுமையில் இருபது,
கழிந்துவிட,
மிஞ்சிய, இடைப்பட்ட,
இந்த இருபதில்,
பொருத்து இருந்தால்,
எமக்கு வாழ, அதை அனுபவிக்க,
இன்னொரு வாழ்க்கை தருவாயோ?!
சர்வாதிகாரி என எதிர்க்க வேண்டிய உன்னை,
ஏனோ, தெய்வமென அகத்தில் வைத்து மண்டியிடுகிறோம்!
இந்நிலை தொடரும் வரை,
நீயும் எம்மாற்றி தப்பித்து விடலாம்!
நாங்களும் மூடராய் பிழைப்பு நடத்துவோம்!?
யாம் பேசுவது பிழையெனில்,
எமை பேசவைத்த , கருவை, ஆதாரத்தை..
யாரெனக் கொள்வதோ!??

1 Comment to "சில கேள்விகள் உமக்காக..."