இந்நாள் வரை,
என் தேவைகள் எல்லாம் எனக்கு வாய்த்தது!
தேவைகள் மிகச் சுருங்கி இருந்த போதிலும்.
என் ஆசைகள் அனைத்தும் அருளப்பட்டது!
ஆசைகள் அளவுக்கு மீறியதாய் இருந்த போதிலும்.
எமக்கு ஆசைகள் உண்டே அன்றி,
கனவுகளாய் எதையும் நான் எண்ணவில்லை!
இதுவரை யாம் உணர்ந்தது இல்லை!
இந்நிலையை!
இன்று, உணர்கிறேன்,
ஆசை வெறும் கனவாகிடுமோ எனும் அச்சத்தை!!
என் ஆசை அவசியமா என்று ஆராயப்படும் சிந்தனைகளை!
சிறிது காலம் தள்ளிப் போடும் அவசரத்தை!
ரசனைகளை விட்டுப் பிரிந்து பாயும் வாழ்க்கை பிரவாகத்தை!
அத்தனைக்கும் மேலாக,
எமக்கு வயதாகி விட்டதோ என்ற உண்மையை!
ஆனாலும்,
ஏதோ ஒன்று வெகு நிச்சியமாக இருக்கிறது?
பெரும் நம்பிக்கையுடன் சிரிக்கிறது?
என் குழப்பதை ரசிக்கிறது!
ஏனோ,
அது என் தகழியில் மட்டுமே தன்னைப் பிரதிபலிக்கிறது! :-)

3 Comments to "ஆனால் ?!"