நான் ஏனோ?
இருப்பினும்,
நாட்கள் நகர நகர,
அறிவை கழித்த ஆசைகளும்,
ஆசைகள் கலந்த அழகுகளும்,
என புதுப் புது சேர்மங்கள்!
என் தனிமைகளில் என் இருக்கங்களில்,
புது ரேகைகள் முளைத்து விரிகின்றன!
நான் எதுவாய் இருப்பினும்,
அப்படியே உள்வாங்கி,
அதுவாய் சிரிக்கும்,
அனுமதிக்கும்..
என் கண்ணாடி நீயென குருகுகிறேன்!
உன் மூளை கொண்டு எதை உடைத்தாலும்,
இருதயம் கொண்டு சேர்த்து எடுப்பாய்,
என்றே நான் தெறித்து சிதறுகிறேன்!
இவ்வார்தைகளுக்குள் இருக்கும் இடைவெளியாய்,
இழையட்டும்,
பிறர் சுயம் மதிக்கும் நம் காதலும்!
என நீ உரைப்பாய் என்றே எழுதுகிறேன் !
இது உன்னைக் காணாத பொழுதுகளில்,
உனக்காக...
உன்னைக் காணும் வேளையில்,
அத்தனையும் உரைத்திட ஏதுமோ?
பின்,
உனக்கான நான், என்பதை,
நீ இயம்ப நான் கேட்பது எப்போது?

2 Comments to "நீ எங்கோ! நான் ஏனோ?"