ஒரு பழைய கனவு!



எப்போதோ வாசித்த புத்தகத்தின்,
பிடித்த வரிகளைப் போல..
முன்னும் பின்னும் அலசுகிறேன்
நினைவலைகளை,
ஒரு பழைய கனவைத் தேடி..

தோழமை பல இருந்தும்,
பகிர்தல் எல்லாம் உணர்வாக மட்டும்!

ஏக்கம் இதுவென்றரியா, தனிமை!
இது இயல்போ, பிழையோ
என்ற குழப்பம்!

என் அறிவு,
வேறு வழியின்றி,
ஒரு ஊடகமாக,
அறிவற்ற என்னை இருத்திக் கொண்டது!

இப்படியாக, என் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க...
ஒரு கனவு!

யாருடனோ நீ பேசிக் கொண்டிருக்க,
அசந்து தான் போனேன், முதலில்,
உன் ஆளுமையைக் கண்டு!

அது என்ன நியதியோ,
அழகு, அறிவு எல்லாம் ஆபத்து!!

தள்ளி நின்றே ரசித்தேன்,
யாருக்கும் தொல்லை தராமல்!

எளிதாக எனை நீ அடையாளம் கண்டு கொண்டாய்!
நான் தான் கொஞ்சம் திணறிப் போனேன்,
உன் அறிவுத் திமிரை செரிப்பதற்கு!

ஊடகத்தை உதறி விட்டு,
உன் வார்த்தைகளையே மொழியாகக் கொண்டது!

என் ரசனைகள் சபிக்கப் பட்டு விட்டதோ,
என நான் அஞ்சினேன்,
காரணம் சூழ்நிலையோ, சூழ்ந்தவர்களோ,
நானறியேன்!
இடைமறித்து,
எனை ரட்சிக்க வந்த தேவதை நீ!

ஒரு கனவு
அர்த்தம் தந்தது,
மொத்த வாழ்வுக்கும்!

நிஜங்கள் பொய்க்கலாம்,
நிழல்கள் மறையலாம்,
தூக்கங்கள் தொலையலாம்,
இக்கனவு மட்டும் தொடர்வதாக....

Thursday, February 24, 2011 at 9:33 AM

10 Comments to "ஒரு பழைய கனவு!"

//ஏக்கம் இதுவென்றரியா, தனிமை!
இது இயல்போ, பிழையோ
என்ற குழப்பம்!//


எதார்த்தத்தில் பிடிபடாமல் நழுவிப் போனதை கனவினில் கைக்கொண்டு அதன் மூலம் அதுவரை இருந்த வெறுமையின் மூலம் அறியபட்டதாக உணர்கிறேன்.

//ஒரு கனவு
அர்த்தம் தந்தது,
மொத்த வாழ்வுக்கும்!

நிஜங்கள் பொய்க்கலாம்,
நிழல்கள் மறையலாம்,
தூக்கங்கள் தொலையலாம்,
இக்கனவு மட்டும் தொடர்வதாக...//

சமகால நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் சரியாக இருப்பதில்லை... பல நேரங்களில் கனவுகளே நிஜங்கள்!

உன் கவிதை வரிகளுக்கு பின்னால் ஜீவன் இருப்பதாக உணர்கிறேன்...!

ஒரு கனவு
அர்த்தம் தந்தது,
மொத்த வாழ்வுக்கும்!


....lovely.

நல்ல அர்த்தங்கள் நிறைந்த கவிதை

Lovely lines ramya!
enjoyed reading it.. awesomeee!
keep writing!

அர்த்தங்கள் நிறைந்த கவிதை.

மிக அருமை
கனவு மட்டும் அல்ல
இதுபோன்ற கவிதைகளும் தொடரட்டும்
வாழ்த்துக்களுடன்

@ அனைவருக்கும் : மிக்க நன்றி, உங்களின் நேரத்திற்கும், கருத்துக்கும்!

அருமை ரம்யா!!பொருட்செறிவு நிறைந்த கவிதை...இதன் கருவின் பின்புலம் நன்கு அறிமுகம் ஆனதால் இதை மேலும் ரசிக்க முடிகிறது என்னால்...
நட்புக்கு மரியாதை!!!!!

நன்றி சிந்து!
நட்பு என்பதற்கு அப்பாற்பட்டும்,
மதிக்கப் பட வேண்டிய இயல்புகள்,
ரசிக்கக் கூடிய அழகுகள்!

நட்பாய் அமைந்தது, வரம்! என்று தான் நினைக்கின்றேன்? :-)

Post a Comment