எழுதி யுகங்கள் கடந்து விட்டது!
எம் நண்பர்களின் கேள்விகளில்,
கொஞ்சம் அழுத்தம் கூடி விட்டது!
இன்னது எழுது பொருள், என்பது
ஒன்றாய் இல்லாமல், பல்வகை விருந்துகள்!
சுவை உணரும் முன்னே வற்றி விடுகிறது,
அல்லது,
பேனா எடுக்கும் முன்னே, அடுத்தது இலை நிரப்புகிறது!
வெகுவாய் என்னிடம் பேசப்படுகிற,
உடனே இல்லாமல் போனாலும்,
ஒரு விதையை, சில சிந்தினைகள், சில உணர்வுகள்,
பதித்து போயின, பதியம் போட்டன!
இது கடன் வாங்கப்பட்ட உணர்வுகள் என்றாலும்,
எழுதும் மை என்னுடையதே!
அதன் அழுத்தம், நான் உணர்ந்ததால், தரப்பட்டதே!
இயல்பு என்பது என்னது?
ஒரு பொதுவான கேள்வி என்பதாலோ
அதற்குரிய விடையும் மிகப் பொதுவாய் அமைந்துவிட்டது பலருக்கு!
ஒரு உயிரின் உண்ணல் , உடுத்தல் , உறங்குதல்!
பலருக்கும் இது ஒப்பும்!
சில திமிர் படைத்தவர்கள்,
(திமிர் என்று சொல்லை ஏற்று கொள்ளுங்கள், அதன் அர்த்தம், தனித்தன்மை படைத்தவர்கள், தன மேல் நம்பிக்கை கொண்டவர்கள் )
தன் கையெழுத்தின் கோடு,
இடமிருந்து வலம் , புள்ளியின் அளவு,
இன்னது என்று வார்தவர்களுக்கு!!!
இயல்பு என்பது என்னது?!!
கண்ட அழகுகளையெல்லாம், ரசித்த வண்ணங்கள் எல்லாம்,
திரட்டி, தீட்டியது --- இயல்பு !!
இன்னவர்கள் இப்படி இல்லை என்று சாடும் உலகில்,
தான் இப்படித் தான் இருக்க வேண்டும்,
என்று செதுக்கியவர்கள்,
வெகு சீக்கிரத்தில் தெரிந்தே நீர்த்துப் போகிறார்கள்!
நான் ரசித்த அந்த சிலருக்காக சொல்கிறேன்!
இயல்பு தான் அழகு!
வேறு எல்லாம் திரிபு!
விளையாட்டின் பல தளங்களும்,
உங்கள் உறுதியை நிச்சியம் பதம் பார்க்கும்!
பொருத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் அழகு பிறருக்கு விளங்கவில்லை
எனில்,
அது அவரின் பார்வை குறைபாடாய் மட்டுமே உணருங்கள்!
நீங்கள் தவறேனும் இழைக்கவில்லை!
வாழ்கையை வாழத் தான் ஆசை!
சிலரை, சிலவற்றை ஒதுக்கப் பழகுங்கள்!
இல்லை என்று சொல்லத் துவங்குகள்!


8 Comments to "இயல்பு!!"