எப்படியும் சொல்லி விட முடியாது , ஏது என்று சொல்லவும் அறியாது!
சொல்லத் துடிக்கும் வேளைகளில்,
நிறைந்து விடுமோ என்று பேதைமை கொள்ளும்,
சொல்லாமல், மருகும் வேளைகளில்,
அழுத்தம் கனத்து, கண்கள் பனிக்கும்!!
காதல் என்ற ஒற்றை சொல்லில்,
வாழ்கையை அடைத்து விட முடியுமா?
காதல் என்னவென்று தெரியவில்லை!?
என் ஒவ்வொரு உயிரணுவிலும்,
புதைந்திருக்கும் என் மூதாதையரின் கரு ரகசியமாகவே,
நான் உனக்கான என் உணர்வுகளை அளவிடுகிறேன்!
நம் உறவுப் பாலத்திற்கு, காதல் என்று பெயர் சூட்டிக் கொள்ளலாம்,
ஆனால் ,
நம் தோழமைக்கு , முன்னரே தோன்றிய, முன் ஜென்ம நினைவுகளுக்கு,
உன் அரவணைப்பே, என் கருவறை,
உன் கால் தடமே, என் பாதை,
என்று எழுதுவதற்கு, வார்த்தை தந்த தமிழுக்கு,
காதல், என்ற ஒற்றை சொல் குறையே!
உருவே, மார்க்கமாய் கொள்வது பக்தி!
உரு கடந்து, கரு வழி சேர்வது முத்தி !
முரண் இங்கே!
உன்னை காணும் முன்பு, பக்தியாய்,
இன்று, முக்தி!
குறிப்பு : இதை முழு மனதாய் எழுத, கரு உருவாய் கொண்டவருக்கு !


1 Comment to "காதல்!"