நான்,
நான் செதுக்கிய 'நான்',
என்று என்னையே ரசித்து,
காண்பவை அத்தனையையும், அழகாய் உணர்ந்து
வாழ்க்கை கவிதையாய் சென்று கொண்டு இருந்தது......
திடீரென்று ஒரு நாள்,
நான் தினமும் முகம் பார்க்கும் கண்ணாடி,
என் பிம்பம் பட்டு உடைந்தது,
உடைந்த சில்லுகள், என் உள்ளத்தையும் கிழித்தது!!!!
அப்படி உதிரம் கொட்ட எத்தனை பகல்கள் நின்று இருந்தேனோ??
எத்தனை இரவுகள் இமைகள் திறந்து உறங்கினேனோ???
என்னால் முடியவில்லை..
எந்தத் திசைச் சென்ற போதும்,
மீண்டும் அந்த வலி, என் நினைவுகளில்....
குருடர்க்கு, கருப்பும் வெள்ளையும் ஒன்று தான்...
நான் கடந்த இரவும் பகல்களையும் போல!!!!!
என்னால்,
வலியை, பொறுக்கவும் முடியவில்லை..
வாழ்க்கையை, வாழவும் தெரியவில்லை...
நான் வாழ்க்கையில் கற்று வைத்து இருந்த கற்பிதங்கள் எல்லாம் என்னை வாழ விடவில்லை.
நான் இதுவரை சேர்த்து, தேக்கி வைத்து இருந்த என்னை, இங்கே இழக்க,
வேறு ஒரு களம், வேறு ஒரு பரிமாணம்...
திசை அறியா பயணம்..
விடியல் இல்லா இரவுகள்...
உயிரின் கடைசி சொட்டு உலரும் வரை பட்டினி...
என அத்தனை விளிம்புகளையும் எட்டினேன்...
உடலும் களைத்தது ,
உள்ளமும் களைத்தது.
மொத்தமாய் மூழ்கி, முழுதாய் கரைந்து...
நான் சாக எத்தனித்த அந்த நொடிகளில் தான்,
பல ஜென்மங்கள் கடந்த வெறுமையை உணர்ந்தேன்..
உயிரோடு செத்தேன்..
செத்து தான் பிறந்தேன்...
நானே மாய்த்து,
நானே மாய்ந்து,
நானே பிறந்து ...
புதியதொரு பயணம் தொடர்கிறது,
இன்னும் பெயர் சூட்டப்படாமல்.....

0 Comments to "பரிமாணம்"