தொலையத்தானே வேண்டும்?!

இல்லாத ஒன்றை , தெரியாத ஒன்றை...
தேடித் தேடி சேர்த்த ஒன்றை...
முழுமையாய் தொலைக்க..
தொலையத்தானே வேண்டும்?!

என் மொழியை மறந்து,
உணர்வே மொழியாய்....
வார்த்தைகளுக்குள் தொலைந்த வாழ்க்கையை....
மௌனத்தில் தானே மீட்க முடியும்!!

படரும் பனி மூட்டதிற்குள், மாயமாய்ப் போகிற அழகைப் போல...
துறத்தும் பற்றுகளைத் தொடர்ந்து மாயமாய்ப் போவேன்.

தெரியாத பாதை,
அடர்ந்த இருள்,
படர்ந்த குளிர்.......

அர்த்தம் தேடா மனது,
சளைத்துப் போன கால்கள்,
சுருங்கிப் போன பசி,
மறத்துப் போன வலி..........

தொலைந்து போன பயம்,
தொலைத்த சந்தோசம்...

காணும் காட்சி,
கவிழும் இமைகள்...
தொடரும் பார்வை...
தொடங்கும் பயணம் ...
அலையாய் இரைச்சல்....
குவிந்த ஈர்ப்பு...
காலங்கள் கடந்த வேகம்....
ஜென்மங்கள் பயணித்த களைப்பு..
அத்தனையையும் உள்வாங்கிக் கொண்ட அசதி,
அத்தனையும் நின்றது,
ஒரு புள்ளியில் அடங்கியது.

எஞ்சியது , மிஞ்சியது, ஸ்தம்பித்து நின்றது....

அமைதி ....
வெறுமை .....


என் அடையாளங்கள் மறந்து,
என் அறிவை துறந்த..
ஒரு பயணம் ....

என் உறவுகளை உடைத்து,
நண்பர்களை மறந்து,
ஒரு நிகழ்வு..............

Thursday, June 24, 2010 at 12:12 PM

5 Comments to "தொலையத்தானே வேண்டும்?!"

ரொம்ப சந்தோசமா இருக்கிற ரம்யா நீ.....!

//ஜென்மங்கள் பயணித்த களைப்பு..
அத்தனையையும் உள்வாங்கிக் கொண்ட அசதி,
அத்தனையும் நின்றது,
ஒரு புள்ளியில் அடங்கியது//


ஒரு புள்ளியும் மறைந்து போகக்கடவாய்....!

//எஞ்சியது , மிஞ்சியது, ஸ்தம்பித்து நின்றது....//

ஸ்தம்பிக்கவில்லை...அனுபவத்தை உதறி..சுயம்பார்த்த சந்தோசம்....!

//என் அடையாளங்கள் மறந்து,
என் அறிவை துறந்த..
ஒரு பயணம் ....

என் உறவுகளை உடைத்து,
நண்பர்களை மறந்து,
ஒரு நிகழ்வு..............//

எல்லாம் அகன்ற நிலை...பேரானந்தம்....! அகத்தில் நீ....பட்டத்து ராணி!

தொலைந்து போ ரம்யா...! அடிக்கடி நிகழட்டும்...! மீண்டுவரும் கணங்களில்.... காணப்போவது என்னவோ...வெறும் சக்கையான வாழ்க்கையையும் மனிதர்களையும்தான்.

ஆனா ரொம்ப பொறமையா இருக்கு... நீ எப்படி இவ்ளோ சந்தோசமா இருக்க? எப்டி கேக்குறேன்னு பார்கிறியா..வரிக்கு வரி அதுதானே தெரியுது...!

சுதந்திரம்.....உண்மையான சந்தோசம்...! வாழ்த்துக்கள் ரம்ஸ்..............

நான் என்பதை தொலைத்தாலே என்னளவில் போதும் என்று எண்ணுகிறேன்.

எதுக்கு மறையனும் எதுக்கு தொலையனும் இருக்குறதுலயே பேரானந்தத்தை தேடலாமே.

அவரவர்க்கு அவரவர் வழி.

மிகவும் அற்புதமாய் இருக்கிறது

ரசித்து எழுதியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள்

//எஞ்சியது , மிஞ்சியது, ஸ்தம்பித்து நின்றது....

அமைதி ....
வெறுமை ..//

எல்லாம் கடந்த நிலையே பேரானந்தம்.. அருமையா இருக்குப்பா.

(தமிழ்மணத்தில் இணைக்கலையா?..)

ramya.. enna sollurathunu therila.. mathavangha solliruka comments ku ennodathu onnum illa...
alagha iruku un kavithaikal un natpu pola

Post a Comment