ஒரு இரவின் பயணம்!
என்றோ எழுத வேன்டியதை ,
நேரமின்மையாலும் எழுதுவதற்கான...
உந்துதலின் குறைப்பாட்டாலும்
தள்ளிப் போட்டு இருந்தேன்!
இன்று....
என் போர்வைக்குளே வந்த வெளிச்சத்தில்...
போர்த்தியிருக்கும் கம்பளி தந்த வெப்பம்...
என் உள்ளத்திற்கும் அந்த வெப்பச்சூட்டின் இதம் பரவ.....
தூக்கம் விழிப்பு என்று பிரித்தெடுக்க முடியாத,
இரண்டும் சங்கமித்த நொடிகளில் உதித்த...
எழுத்துக்கள் இவை!
எப்போது கண் மூடினாலும்
கண்ணுக்குள் தோன்றுகின்ற ஒரு படம்...
ஒரு மழை இரவு
யாருமற்ற காட்டுப்பாதையில்...
யாரோ, கைகட்டி நடந்து செல்வது போல்…..
அவ்வுருவம் ஆணா? பெண்ணா?
எனக்கு ஆராய தோன்றவில்லை...!
“ஓர் ஆன்மாவின் முழுமையான தனிமை”
இதை மட்டும் நான் எப்போதும் உணர்ந்டு வந்திருக்கிறேன்!
அதில்…
மகிழ்ச்சி என்று எதுவுமில்லை....
துன்பம் என்றும் எதுவும் எல்லை….
என் சுவாசம் எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானது அந்த காட்சியும்,
அதற்கான என் உணர்வுகளும்,,.!
அதன் அர்த்தம் என்ன? உணர்துபவை என்ன?
அனைத்தும் உணரப்பட்டது .. உணரப்பட்டது
ஓர் நள்ளிரவில்..!
ஓர் நள்ளிரவில்…..
என்று ஒரு வரியில் அடங்கி விடுவது அல்ல...,
அதன் அழகுகளும், அதற்கான புறப்பாடுகளும்!
ஆரவரமில்லாதா
வார்த்தைகளால் விவரிக்க முடியாத
என் பூரிப்பு!
அதகி நானெ ரசித்த ரசிப்பு தன்மையும்…
கூட…………………………………..
என் நண்பர்களின் அருகாமை….
அழகான அமைதியை தந்தது…..
ஆழமான உறக்கத்தை தந்தது!
கனவுகளற்ற சலனமற்ற..அடர்த்தியான நித்திரை....!
நம்பத்தன்மையற்ற ஏதோ ஒன்று...
என் அருகில் இருந்த, என்னவளின் அவஸ்தை... வலி…
எனக்கும் வலிக்கச் செய்தது!
என் தூக்கத்தையும் கெடுத்தது!
என்ன செய்வது என்று தெரியாவிட்டாலும்
ஏதோ செய்ய வேண்டுமென்று உணர்த்தியது அந்த வலி!
அவள் கேசத்தைதான் கோதிவிட்டேன்!
ஆழகனவள்..
ஆன்பனவள்…
அலட்டாமல் அரற்றமல் அப்படியே தூங்கி விட்டாள்!
அவல் தூங்கிவிட்டாள்...
ஆனால் என்னைத்தான் ஏதோ இம்சித்தது!
இமைகள் மூட இதயம் மறந்தது!
ஏதோ பாரமாய் உணர...
கொஞ்சம் விலகி வந்தேன்!
கொஞ்சம் சுவாசத்துக்காக!
மூடியிருந்த ஜன்னல்களை திறந்தேன் முதலில்!
நான் கண்டவை…என்னை பயமுறுத்தியது..
அது ஏனோ... அழகானவை ..ரசிக்கத்தக்கவை....
என்ற எல்லாவற்றையும் என் முதல் சந்திப்பில் கண்டு...
பயந்து இருக்கிறேன்!
(இங்கு என்னவள் என்று நான் அழைத்த அழகியையும் சேர்த்து...)
என்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை
அந்த மாபெரும் மெளனத்தின் சக்தியை
இரண்டொரு நிமிடம் நான் கண் மூடினால் வரும் பிம்பத்தை....
அன்று நிஜமாய் " நானாய் " உணர்ந்தேன் "
அடர்த்தியான காடு
குடிகொண்ட நிசப்தம்...
உறுத்தாத நிலவின் ஒலி
பிதற்றாத மனது!
என்று அனைத்தையும் அழகாக இயல்பாக் இணைத்தது...
அதில் விவரிக்க ஏதுமில்லை
உணர்ர்ந்தால் ஒழிய மெளனத்தை...
உணர்த்திட முடியாது மோட்சத்தை...!
அந்த கெட்டியாய் போன இரவில்
கரைந்த சில நிமிடங்களில்
அவற்றில் தான் நான் உணர்ந்தேன்
என் அறிவு, குடும்பம், நட்பு
உலகம்,
இவர்களுக்காக...
நான் இத்தனை காலமாக வளர்த்து வந்த காதலை....
அது மெளனமாக வெளிப்பட்டது...
மெளனத்தில் வெளிப்பட்டது!
அந்த தனிமை என்னை அழகாக்கியது...
நான் அந்த தனிமையை கெளரவப்படுத்தினேன்....!
இன்று வரை...எப்பொழுதும்…
என் இமைகள் கவிழ்ந்தால்…
அந்த இரவின் தொடர்ச்சி....…….
………………………தொடர்கி றது,

2 Comments to "ஓர் இரவின் பயணம்"