I Miss u!!!


எத்தனை முறை சொல்லி இருப்பேன் ,
நான் உன்னை நேசிக்கிறேன் என்று?

நான் அதில் கஞ்சத்தனம் பட்டதே இல்லை!
கண் பட்டு விடுமே என்று,
நீ அதை கணக்கு வைத்துக் கொண்டதே இல்லை .

இன்று உன்னை சுவாசிக்கிறேன், வாசிக்கிறேன்!

கடந்து செல்லும் ஒவ்வரு நொடியும்,
உனக்கான ஆசையோடு தொடங்கி
உனக்கான ஏக்கத்தோடு தான் முடிவடைகிறது.

என் வாழ்க்கையை வாசிக்கிறேன்,
அதில் என்னுடைய கிறுக்கல்களை விட,
உன்னுடைய தூரிகை பதிவுகளே அதிகமாக இருக்கின்றது.

நான் காண்பவை எல்லாம்,

என் கோவங்களும், உனது கண்ணீரும்!

அதிகமாய் உன்னை நேசித்தும்,
காயப்படுத்திய என் வேகமும்,
மௌனத்திலே தண்டித்து, மன்னித்த உனது அமைதியும் தான்!!

ஆரவாரமாய் அறிவித்த எனது நேசமும்,
அனைத்தையும் அமைதியாய் ரசித்த உனது பாசமும் தான்!
நான் உணர்வெதல்லாம்,

நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட அந்த புரிதலை தான்........

ஒற்றை வரியில் சொல்ல முற்பட்டால்,

நாம் சேர்ந்து, வாழ்ந்த, அந்த நாட்களைத் தான், வாழ்க்கையைத் தான் ..

நான் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன், தனியாக!!!!!!!

Thursday, June 17, 2010 at 11:34 AM

0 Comments to "I Miss u!!!"

Post a Comment