ஊழ்வினை

ஊழ்வினை எங்கோ இழுக்க,
உள்ளம் எங்கோ நிலைக்க,
உறவுகள் எதற்காகவோ துரத்த,
உன்னில் என்று கலப்பேனோ?
என்னை எங்கு தொலைப்பேனோ ?

இது என்ன நிலை?
பயம், வெறி, கோவம், களிப்பு என்று எதுவும் கட்டுப்படுத்த முடியாமல்
ஏதோ ஒன்று அழுத்த
ஏதோ ஒன்று திமற
உடல் தளர்ந்து
மனம் நிமிர்ந்து
மோனம் , மோகம் என்று எட்ட முடியாத எல்லைகளில்
ஏன் இப்படி நிலை கொண்டு நிற்கிறது ?
வார்த்தையும் பத்தவில்லை ,
என் வாழ்கையும் !
இன்னும் வேகம் , இன்னும் பயம், இன்னும் தேடல்கள்!!!!!

Thursday, June 17, 2010 at 10:38 AM

0 Comments to "ஊழ்வினை"

Post a Comment